×

1865 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் பதிவான 50 கோடி ஆவணங்களை ஸ்கேன் செய்வதில் குளறுபடி: பதிவுத்துறை ஐஜி அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அறிவுரை

சென்னை: 1865 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் பதிவான 50 கோடி ஆவணங்களை ஸ்கேன் செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில், பதிவுத்துறை ஐஜி அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக பதிவுத்துறை ஐஜி அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்ைக ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரங்களை ஸ்கேன் செய்யும் பணியை சரிபார்க்கும் வண்ணம் சுழற்சிமுறையில் பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஸ்கேன் செய்யப்பட்ட ஆவண பிம்பங்களை சரிபார்க்கும் போது தவறாக  ஸ்கேன் செய்யப்பட்டஆவணங்களை மீண்டும் ஸ்கேன் செய்ய வேண்டும். அதாவது, மங்கிய நிலையிலான ஆவண பிம்பம், முழுமையற்ற ஆவண பிம்பம், ஆவண பக்கங்கள் விடுதல், ஆவணக்குறிப்புகள் ஸ்கேன் செய்யாமை, வரைபடங்கள் ஸ்கேன் செய்யாமை, ஆவண பிம்பத்தில் உள்ள ஆவண எண் மற்றும் ஆண்டும்ஆவண கோப்புடன் சரியாக இல்லை, ஆவண பக்கங்கள் முறையின்றி ஒளிவருடல் செய்யப்படுதல், ஆவண பிம்பம் வளைந்து இருந்தல், ஆவண பிம்பங்களில் உள்ள எழுத்துக்களை படிக்க இயலா வண்ணம் கரும்புள்ளிகள் முற்றிலுமாக மறைத்த ஆவணங்களை மீண்டும் ஸ்கேன் செய்ய வேண்டும்.

ஆவண தொகுதிகளில் ஆவணங்கள் கோர்வை செய்யப்பட்ட முறையில் ஓர் ஆவண எண் நிறைவடைந்தவுடன் அடுத்த ஆவண எண் அதே பக்கத்தில் தொடங்கும் ெதாகுதிகளில் முதல் ஆவணமும், இரண்டாம் ஆவணமும் சரியாக பிரித்து சரியான ஆவண எண்ணுடன் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளதா என கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆவணத்தின் முதலிலோ அல்லது கடைசியிலோ உள்ள அடிக்குறிப்புகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து ஒளிவருடல் செய்யப்படுகிறதா எனவும் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இப்பணியை 6 மாத காலத்திற்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டு அனைத்து அலுவலகங்களிலும் ஒரே சமயத்தில் பணியை ஆரம்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Scanning ,iG , Registration IG, All Parties
× RELATED தமிழக – கேரள எல்லையில் மேற்கு மண்டல ஐஜி புவனேஸ்வரி ஆய்வு