×

போலீஸ் சேனல்..... கஞ்சாவின் பிடியில் வேலூர்

வேலூர் மாநகரில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மாநகரில் குறிப்பாக காகிதப்பட்டறை பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரே, சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை மலையடிவாரம், ஓல்டு டவுன், வேலப்பாடி பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை வெகுஜோராக நடக்கிறது. இப்படி கஞ்சா எங்கெல்லாம் விற்பனை செய்யப்படுகிறது?, யார், யார் விற்பனை செய்யுறாங்கனு காவல்துறைக்கு அத்துபடியாம். இவ்வாறு விற்பனை செய்து கிடைக்கும் வருவாயில் சரியான பங்கு சேர வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்து விடுகிறதாம். இதனால் மாசத்துக்கு ஒன்றோ, இரண்டோ வழக்குளை போட்டு நாங்களும் கஞ்சா விற்பனை செய்பவரை பிடிச்சோம்னு, வடக்கு, தெற்கு போலீசார் கணக்கு காட்டுறாங்களாம். குறைந்த விலைக்கு கஞ்சா கிடைப்பதால் பள்ளி மாணவர்கள் சிறுவயதிலேயே போதைக்கு அடிமையாகி தவறான பாதைக்கு திரும்பி குற்ற வழக்குகளில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவல்துறை இவ்விஷயத்தில் தங்களது கடமையை மறப்பதால் இளம்வயது குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் புலம்பித்தீர்க்கின்றனர். இளம் தலைமுறையை சீரழிக்கும் கஞ்சா விற்பனை பின்னணியில் பெரிய நெட்வொர்க் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து சித்தூர், காட்பாடி வழியாக சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்டு மாநகரில் பரவலாக சப்ளை செய்யப்படுகிறதாம். இதனால் வரும்வழியெல்லாம் சம்திங் செல்வதால் வேலூர் மாநகரில் கஞ்சாவுக்கு தடையில்லையாம். இளம் தலைமுறையினரை கஞ்சாவின் பிடியில் இருந்து பாதுகாக்க எஸ்பி நேரடியாக தலையிட்டு தீவிர சோதனை நடத்தி, கஞ்சா விற்பனையில் முக்கிய புள்ளியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Police Channel ,Ganja , Police Channel
× RELATED காட்பாடி வழியாக எர்ணாகுளம் செல்லும்...