×

டிடிவி.தினகரன் கோரிக்கை நிராகரிப்பு இரட்டை இலைக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: அதிமுக என்ற கட்சி பெயர், இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை வழக்கின் இறுதி உத்தரவு வரும் வரை முடக்கி வைக்க வேண்டும் என டிடிவி.தினகரனின் வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு பின்,  இரட்டைஇலை சின்னம், அதிமுக ஆகியவற்றை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இதை எதிர்த்து, டிடிவி.தினகரன் தரப்பில் கடந்த 5ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக்குதா மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதத்தில், வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரையில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும்.

மேலும் எதிர்வரும் தேர்தலில் எங்களது தரப்பில் போட்டியிட குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய விவகாரத்தில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில், அதில் தேர்தல் ஆணையம் தீர விசாரித்த பிறகுதான் இறுதி ஒதுக்கீட்டை செய்து இருக்கும். இருப்பினும் எதிர்வரும் தேர்தலில் டிடிவி.தினகரன் தரப்பு போட்டியிடுவதற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என தெரிவித்தனர். மேலும், வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DTV Dinakaran ,Supreme Court , TTV Dinakaran, Supreme Court
× RELATED கோடை வெப்பத்தையொட்டி குடிநீர்,...