×

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல்காந்தி நிகழ்ச்சி; விசாரணை நடத்த கல்வி இயக்குனர் உத்தரவு

சென்னை: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல்காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது எப்படி என்று கல்லூரி கல்வி இயக்குனர் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது எப்படி அனுமதிக்கலாம்? என்றும், இது தொடர்பாக விசாரித்து அறிக்கை தர இணை இயக்குனருக்கு, கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று முன்தினம் தமிழ்நாடு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டேல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

ஜீன்ஸ் பேன்ட், டீ சார்ட் அணிந்து  கல்லூரி மாணவர் போல காட்சியளித்த ராகுல் மாணவிகளின் அனைத்து கேள்விகளுக்கும் நேர்த்தியாகவும், தெளிவாகவும் பதில் அளித்தார். இந்நிலையில் மாணவிகளின் கேள்விகளுக்கு ராகுல் பதில் அளித்த வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆகிவருகிறது. குறிப்பாக என்னை சார் என்ற அழைக்க வேண்டாம் ராகுல் என்றே அழையுங்கள் என்று ராகுல் தெரிவித்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.

காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கம் மற்றும் ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோக்களை குறைந்தது 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். இறுதியாக மாணவிகளுடன் செல்பி எடுக்கும் ராகுலின் புகைப்படத்திற்கு டிவிட்டரில் 35 ஆயிரம் லைக்குகளும், இன்ஸ்டாகிராமில் 69 ஆயிரம் லைக்குகளும், பேஸ்புக்கில் 14 ஆயிரம் லைக்குகளும் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஸ்டேல்லா மேரீஸ் கல்லூரி மாணவி, ‘இது மிகவும் சிறப்பான கலந்துரையாடல், பதில்கள் அனைத்தும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். மற்றொரு மாணவி, ‘அவர் கல்லூரி மாணவர் போல் காட்சியளித்ததாகவும், அவருடன் பேசியது நண்பருடன் பேசியது போல் இருந்தது’ என்று கூறினர்.  மேலும் சில மாணவிகள் அவரின் பதில்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தாகவும், குறிப்பாக மோடி ஏன் கட்டிபிடித்தீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் தங்களை மிகவும் ஈர்த்ததாகவும் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahulkanthi ,Director of Education ,Stella Maris College , Stella Maris College, Girls, Rahul Gandhi, College Education Director, Election Code of Conduct,
× RELATED புதுச்சேரி பள்ளிகளில் மார்ச் 24 முதல் கோடைவிடுமுறை..!!