மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் 12-வது சீசனின் முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு .இந்நிலையில் ஐபிஎல் 2019 குறித்த தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல கிரிக்கெட் வீரருமான ஷேன் வார்னே இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஷேன் வார்னே தன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் தன் அணி வீரர் பெயரைக் குறிப்பிட்டு அவர் தான் ஐபிஎல் தொடர் நாயகனாக வருவார் எனக் கூறியுள்ளார். மேலும் மும்பைக்கு மீண்டும் வந்ததையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தூதராகச் செயல்படுவதையும் சிறப்பாகக் கருதுவதாக கூறியுள்ளார். எங்கள் முதல் ஆட்டத்துக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. இந்த அணியைப் பார்க்கும்போது இந்தமுறை ஐபிஎல் போட்டியை ராஜஸ்தான் அணி தான் வெல்லும் என நினைக்கிறேன். சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதைப் பெறுவார் என்றும் கருதுகிறேன் எனத் தன் கணிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னணி ஐபிஎல் வீரர்களில் ஒருவர் சஞ்சு சாம்சன் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், கடந்த ஆண்டு மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் போது அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 15வது இடத்தையே சஞ்சு சாம்சன் பிடித்துள்ளார். சஞ்சு சாம்சனை விட பல இளம் வீரர்கள் அதிரடி வானவேடிக்கை காட்ட தயாராக உள்ளனர். அது போல அனுபவம் வாய்ந்த அதிரடி வீரர்கள் பலரும் காத்துள்ள நிலையில் ஷேன் வார்னேவின் கணிப்பு மெய்யாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
