×

யாருடன் கூட்டணி 10ம்தேதி அறிவிக்கப்படும் கமல்ஹாசன் எங்களுக்கு தூது அனுப்பினார்: வேல்முருகன் பேட்டி

சென்னை: யாருடன் கூட்டணி என்று வரும் 10ம்தேதி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எங்களுக்கு தூது அனுப்பினார் என்றும் வேல்முருகன் கூறினார்.
 தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  ரயில்வே தேர்வு, எஸ்எஸ்சி ஆகிய மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சென்னை, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தேர்வு எழுதிய மாணவர்கள் இந்த தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து எனக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதை விசாரித்து பார்த்தால் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. ரயில்வே துறையை பொறுத்தவரை டோல்கேட் பணிகளில் அதிக அளவில் வடமாநிலத்தவர்களுக்கே வேலை கிடைக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்போம், தேர்தலில் யார் போட்டியிடுவார்கள் போன்ற கேள்விகளுக்கு வரும் 10ம்தேதி வடலூரில் நடைபெறும் கட்சி மாநாட்டில் அறிவிக்கப்படும்.
 நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எனக்கு தூது அனுப்பினார். கூட்டணி அமைப்பது தொடர்பான அறிவிப்பு வரும் 10ம்தேதி வெளியிடப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kamal Haasan ,messenger ,interview ,Velmurugan , Kamal Hassan, Velmurugan
× RELATED ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட...