×

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமான விவகாரம்: சிபிசிஐடிக்கு புதிய வீடியோ ஆதாரம் சிக்கியது

சென்னை: சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக சிபிசிஐடிக்கு புதிய வீடியோ ஆதாரம் ஒன்று சிக்கியுள்ளது. அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தின் போது போலீசார் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தியதற்கான ஆவணங்களுடன் கடந்த 14ம் தேதி சென்னையில் ஆவண படம் ஒன்றை முகிலன் வெளியிட்டார்.  ஆவணப் படம் வெளியிட்ட மறுநாளே அதாவது கடந்த 15ம் தேதி இரவு சென்னையில் இருந்து மதுரை செல்ல எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தவர் திடீரென மாயமானார். இதுகுறித்து கடந்த 17ம்தேதி எழும்பூர் ரயில் நிலைய காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர்- இளையோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி புகார் ஒன்று அளித்தார்.

அதன்படி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து முகிலன் செல்போன் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று விசாரணை நடத்தினர். அப்போது, முகிலன் சம்பவத்தன்று எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து சிறிது நேரம் கழித்து ெவளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், அவரது செல்போன் செங்கல்பட்டு வரை சிக்னல் இருந்துள்ளது. அதன் பிறகு செல்போன் சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து முகிலன் மாயமான வழக்கை, தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ரயில்வே போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்படி சிபிசிஐடி போலீசார் கடந்த 2ம் தேதி முகிலன் குறித்து புகார் அளித்த லயோலா மணியிடம் விசாரணை நடத்தினர்.

அதன்பிறகு சிபிசிஐடி போலீசார் எழும்பூரில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, முகிலன் கடந்த 15ம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ெவளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் காட்சியும் பதிவாகி இருந்தது. இதனால் முகிலன் ரயில் மூலம் சென்ைனயில் இருந்து சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, முகிலன் மதுரைக்கு சென்றாரா அல்லது வேறு எங்கேயாவது சென்றாரா என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mugilan ,CBCIT , Environmental activist, Miguel,CBCID
× RELATED ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு...