×

ஹைட்ரோ கார்பன் எமன் வந்துட்டான்... எங்களை கொல்ல போறான்... கரியாபட்டினத்தில் ஒப்பாரி வைத்து போராட்டம்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை கைவிட வேண்டும், காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரியாபட்டினத்தில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தென்னங்குளம், செண்பகராயநல்லூர், மணக்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றுள்ளனர்.

5-வது நாளாக நீடித்த போராட்டத்தில் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். அரசு பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கை. இல்லையெனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே மார்ச் 9-ம் தேதி பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Yemen ,Kariapattinam , Nagage, Vedaranyam, Kariyapattinam, Public, Hydrocarbon, Cauvery, Struggle, Waiting Struggle
× RELATED ஹமாசுக்கு ஆதரவாக செயல்படும் ஹவுதி...