×

மாநில ஹாக்கி: முதல்முறையாக ஐஓபி அணி சாம்பியன்

சென்னை: இந்தியன் வங்கி கோப்பை 3வது சீசன் ஹாக்கி தொடரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சென்னையில் மார்ச் 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த இத்தொடரில் தமிழக காவல்துறை, வருமான வரித்துறை, மத்திய கலால், இந்திய விளையாட்டு ஆணையம் உட்பட 12 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றின் முடிவில் ஐசிஎப், தெற்கு ரயில்வே, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. முதல் அரை இறுதியில் ஐஓபி அணி 4-3 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஐசிஎப்பை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. 2வது அரை இறுதியில் இந்தியன் வங்கி 3-0 என்ற கோல்கள் கணக்கில் தெற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது.

எழும்பூர் ஹாக்கி அரங்கில் நேற்று நடந்த  பைனலில் ஐஓபி - இந்தியன் வங்கி  அணிகள் மோதின. இதில் ஐஓபி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று  முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 3வது இடத்துக்கான மோதலில் ஐசிஎப்  2-0 என்ற கோல் கணக்கில் தெற்கு ரயில்வேயை வீழ்த்தியது. சாம்பியன் பட்டம் வென்ற ஐஓபி  அணிக்கு டிராபியுடன் ரூ40 ஆயிரம் வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த இந்தியன் வங்கி அணிக்கு ரூ30 ஆயிரம், மூன்றாவது இடம் பிடித்த ஐசிஎப் அணிக்கு ரூ20 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IOP Team Champion , State hockey, IOP team, champion
× RELATED பாகிஸ்தானுடன் 2வது டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் நிதானம்