×

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

புழல்: சோழவரம் அடுத்த காரனோடை ஜிஎன்டி சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், எதிர்ப்பை மீறி, நேற்று அந்த கடை திறக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனை கண்டித்து சோழவரம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார் மற்றும் பொன்னேரி வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மேற்கண்ட பகுதியில் டாஸ்மாக் கடை திறக்காமல் இருக்க எடுக்கப்படும், என உறுதி  அளித்தனர். அதன்பரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கலைந்துசென்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Demonstrators ,demonstration , Tasmak, public demonstration
× RELATED பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்