×

பயங்கரவாத அமைப்புகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக்: பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை!!

தெஹ்ரான் : பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் மீது இந்தியாவின் பாணியில்  சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானில் பிப்ரவரி 13ம் தேதி பாதுகாப்புப் படையினர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 27 வீரர்கள் கொல்லப்பட்டன. இந்த தாக்குதலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

 மேலும் சமீபத்தில் இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற நடவடிக்கையை ஈரான் எடுக்கப்போவதாகவும் பாகிஸ்தானுக்கு ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசியுள்ள ஈரானின் பாதுகாப்புப் படை தளபதி ஜெனரல் காசிம் சூலைமானி அண்டை நாடுகளை அழிக்கும் அளவுக்கு பலம் வாய்ந்த அணுகுண்டை வைத்திருக்கும் பாகிஸ்தான், அவர்கள் மண்ணில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளை அழிக்க முடியாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரைவில் இந்தியாவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sergeant Strike ,terrorist organizations ,Pakistan ,Iran , Pakistan, Iran,surgical Strike, terrorist organizations
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...