×

சம்ஜோதா ரயில் சேவை மீண்டும் தொடக்கம்... 12 பேர் மட்டுமே பாகிஸ்தானுக்கு பயணம்

டெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலால் டெல்லியில் இருந்து லாகூர் சென்றுள்ள சம்ஜோதா ரயில்யில் 12 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தது. இந்த தாக்குதலில் முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது.  இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. அதில் இருந்த விமானி அபிநந்தன் உயிருடன் கைது செய்யப்பட்டார். இதனால் இருநாடுகளிடையே பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் டெல்லியில் இருந்து லாகூர் வரை இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்தது.

பின்னர் சிறை பிடிக்கப்பட்ட விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்ததால் மீண்டும் ரயில் சேவையை இந்திய தொடங்கியது. டெல்லியில் இருந்து சென்ற அந்த ரயிலில் 12 பேர் மட்டுமே பயணம் செய்தனர். அந்த 12 பேரும் பாகிஸ்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Samjhauta ,Pakistan , Samjhauta train ,service, 12 people, travel ,Pakistan
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...