×

201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது

* விஜய் சேதுபதி, கார்த்தி, குட்டி பத்மினி பெறுகின்றனர் * தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 2011 முதல் 2018ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை 201 கலைஞர்களுக்கு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு பரிந்துரையின்படி இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற பல்வேறு கலைப்பிரிவுகளில் புகழ்பெற்ற கலை வித்தகர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான “கலைமாமணி” விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். அதன்படி 2011 முதல் 2018 ஆண்டுக்கான கலைமாமனி விருது 201 பேருக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2011ம் ஆண்டு: குரலிசை கலைஞர் நெய்ேவலி சந்தான கோபாலன், மெல்லிசை கலைஞர் அபஸ்வரம் ராம்ஜி, நாடக நகைச்சுவை நடிகர் வெங்ட்ராமன், இசை நாடக நடிகர் எம்.எஸ்.பி.கலைமணி, திரைப்பட நடிகர்கள் ராஜசேகர், ராஜீவ், குட்டி பத்மினி, பாண்டு, நடன இயக்குனர் புலியூர் எஸ்.சரோஜா, பின்னணிப் பாடகி சசிரேகா, உடை அலங்கார நிபுணர் காசி உள்ளிட்ட 30 பேர்2012ம் ஆண்டு: இயற்றமிழ் கவிஞர் இலக்கிய வீதி இனியன், குரலிசை கலைஞர் ஷோபனா விக்‌னேஷ், ஹிரிகதா விற்பன்னர் விசாக ஹிரி, பரதநாட்டிய ஆசிரியர் அனிதா குஹா, பரதநாட்டிய கலைஞர் ரேவதி ராமசந்திரன், பாகவதமேள கலைஞர் மகாலிங்கம், திரைப்பட நடிகை வரலட்சுமி, உலகநாதன், இயக்குனர் சித்ரா லட்சுமணன், காவடியாட்ட கலைஞர் சிவாஜிராவ், புரவியாட்ட கலைஞர் யோகலிங்கம் உள்ளிட்ட 30 பேர்.2013ம் ஆண்டு: நூலாசிரியர் சுப்பிரமணியன், வயலின் கலைஞர் வெங்கடேஷ், திரைப்பட நடிகர் பிரசன்னா, நடிகை நளினி, பழம்பெரும் நடிகை குமாரி காஞ்சனா தேவி, சாரதா, குணச்சித்திர நடிகர் பாண்டியராஜன், நகைச்சுவை நடிகர் டி.பி.கஜேந்திரன், சண்டை பயிற்சியாளர் ஜூடோ கே.கே.ரத்தினம், நாட்டுப்புறப் கலைஞர் வேல்முருகன், நாட்டுப்புறப் பாடகி பரவை முனியம்மா சிற்பக் கலைஞர் திருஞானம் உள்ளிட்ட 19 பேர்.

2014ம் ஆண்டு: முனைவர் அய்க்கண், குரலிசை கலைஞர் மாம்பலம் சகோதரிகள் விஜயலஷ்மி மற்றும் சித்ரா, நாதஸ்வர தம்பதிகள் செந்தில்முருகன் மற்றும் சாந்தி செந்தில்முருகன், திரைப்பட நடிகர்கள் கார்த்தி, சரவணன், பொன்வண்ணன், சுரேஷ் கிருஷ்ணா, பின்னணி பாடகி மாலதி, நடன இயக்குனர் எம்.ஏ.தாரா மாஸ்டர், பண்பாட்டுக் கலை பரப்புநர் ஜெயராம், நாட்டுப்புற பாடகர் சத்தியபாலன் உள்ளிட்ட 20 பேர்.2015ம் ஆண்டு: மிருதங்க கலைஞர் வைத்திநாதன், வீணை கலைஞர் கீதா கிருஷ்ணமூர்த்தி, நாடக நடிகர் மாது பாலாஜி, நடிகர் பிரபு தேவா, இயக்குநர் பவித்ரன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பாடலாசிரியர் யுகபாரதி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, பின்னணி பாடகர் கானா பாலா, வில்லிசை கலைஞர் பாரதி திருமகன் உள்ளிட்ட 20 பேர்.

2016ம் ஆண்டு: இயற்றமிழ் கலைஞர் கோதண்டம், புல்லாங்குழல் கலைஞர் விஜய கோபால், நாதஸ்வர கலைஞர் எம்.கே.எஸ்.நடராஜன், திரைப்பட நடிகர் சசிகுமார், எம்.எஸ்.பாஸ்கர்,தம்பி ராமையா, சூரி, சமய சொற்பொழிவாளர் ராசகோபாலன் உள்ளிட்ட 20 பேர்.2017ம் ஆண்டு: குரலிசை கலைஞர் செளம்யா, பரதநாட்டிய கலைஞர் பிரியா முரளி, நடிகர் விஜய்சேதுபதி, நடிகை பிரியாமணி, இயக்குநர் ஹரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் கலைஞானம், கைச்சிலம்பு ஆசிரியர் இராஜநிதி, கரகாட்ட கலைஞர் தவமணி உள்ளிட்ட 28 பேர்2018ம் ஆண்டு: மருத்துவ நூல் ஆசிரியர் டாக்டர் அமுதகுமார், குரலிசை சகோதரிகள் சண்முகப்பிரியா மற்றும் ஹரிப்பிரியா, நடிகர் ஸ்ரீகாந்த், நகைச்சுவை நடிகர் சந்தானம், தயாரிப்பாளர் ரெத்தினம், பின்னணி பாடகர் உன்னிமேனன், தோற்பாவை கூத்து கலைஞர் முத்துலெஷ்மணராவ், கொக்கலிக்கட்ைட கலைஞர்  கோவிந்தராஜ் உள்ளிட்ட 34 பேர் என 201 பேருக்கு வழங்கப்படுகிறது.  விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் மூன்று சவரன்  எடையுள்ள பொற்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.

மேலும், அகில இந்திய அளவில் புகழ்பெற்ற தமிழக கலைஞர்களுக்கு இயல் பிரிவில் “பாரதி” விருதினை புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்பு ஆறுமுகம் மற்றும் சிவசங்கரி ஆகியோருக்கும், இசைப்பிரிவில் “எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது” எஸ்.ஜானகி, பாம்பே சகோதரிகள் சரோஜா மற்றும் லலிதா, வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கும், நாட்டியப்பிரிவில் “பால சரஸ்வதி விருது” வைஜயந்தி மாலா பாலி, வி.பி.தனஞ்ஜெயன் மற்றும் சி.வி. சந்திரசேகர்  ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது இவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையுடன் சான்றிதழும் வழங்கப்படும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Artists , Kalaimamani Award , Artists , 201
× RELATED குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடைகால...