×

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரம் : ஆளுநர் முட்டுகட்டையாக உள்ளதாக அற்புதம்மாள் புகார்

கடலூர்; பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதற்கு முட்டுகட்டையாக உள்ளதாக அற்புதம்மாள் குற்றம்சாட்டியுள்ளார். எழுவர் விடுதலைக்காக மக்களை சந்தித்து வரும் பேரறிவாளனின் தாயான அற்புதம்மாள், நேற்று கடலூரில் பல்வேறு கட்சியினரை சந்தித்து அவர்களிடையே பேசினார். அவர்கள் மத்தியில் தற்போதைய நிலையை எடுத்து கூறி ஏழு பேரை விடுவிக்க முழுஆதரவு அளிக்குமாறு கோரினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் பன்வாரிலால் 6 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருதாக சாடினார்.

ஆளுநரை இரண்டாவது முறை சந்திக்க அனுமதி கிடைக்காத காரணத்தால் மக்களை சந்தித்து ஆதரவு கோரி வருவதாகவும் அற்புதம்மாள் குறிப்பிட்டார். இவ்வழக்கில் அனைத்து விவகாரங்களும் சட்டத்தை மீறியே நடைபெற்று வருவதாக வேதனை தெரிவித்தார். சட்டத்தை மதித்து தங்களது மகன் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வாடுவதாக கூறிய அவர், அதே சட்டத்தை ஆளுநர் தற்போது மதித்திருந்தால் தங்கள் தரப்பிற்கு இவ்வளவு கஷ்டம் எப்படி வரும் என வினவினார். மும்பை வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய் தத்தை நன்னடத்தை பேரில் விடுதலை செய்தனர். ஆனால், 28 ஆண்டுக்காலம் சிறையில் உள்ள 7 பேரை ஏன் விடுதலை செய்ய மறுக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : release ,magistrates ,governor ,pilgrims , Perarivalan, Nalini, Governor Panwarilal Purohit, Luck, Wonderful
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...