×

கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனருக்கு விருது

சென்னை: சர்வதேச விளம்பரதாரர் கூட்டமைப்பு சார்பில், 44வது ஐஏஏ உலக காங்கிரஸ் விழா கொச்சியில் நடந்தது. இதில், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தை உலக அளவில் சந்தைப்படுத்துதலில் சிறந்து விளங்கியதாக, கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.எஸ்.கல்யாணராமனுக்கு சிறப்பு விருதை, கல்யாண் ஜூவல்லர்ஸின் இந்திய விளம்பர தூதரும், நடிகருமானஅமிதாப்பச்சன் வழங்கினார். விழாவில் டி.எஸ்.கல்யாணராமன் பேசியதாவது: கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தை சிறந்த முறையில் சந்தைப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட இந்த விருதை பெறுவதில் பெருமை அடைகிறேன். இதை எங்களது வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். அவர்கள் இல்லாமல் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது.கேரளாவில் ஒரே ஒரு கடையுடன் தொடங்கிய எங்கள் வளர்ச்சி மற்ற மாநிலங்கள் மற்றும் உலகளவில் பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. இதற்கு, வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை தான் காரணம். எங்களது சந்தைப்படுத்தும் உத்தியை நிலையாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள உள்ளூர் கலாச்சாரத்தில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைத்து கொண்டோம். இதுவே எங்கள் வெற்றிக்கு காரணமாக இருந்ததாக நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : International Advertiser Federation, founder of Kalyan Jewelers, Award
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...