×

மக்களவை தேர்தலில் அதிமுக, பாமக, பாஜ படுதோல்வி அடையும் : நாஞ்சில் சம்பத் பேட்டி

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக, பாமக, பாஜ படுதோல்வி அடையும் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.இதுகுறித்து நாஞ்சில் சம்பத்அளித்த பேட்டி: மக்களவை தேர்தலில் அதிமுக, பாமக, பாஜ வெற்றியை கூட நினைக்க கூடாது. அதை கனவில் கண்டால் கூட உடனே எழுந்து விட வேண்டும். மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். குறிப்பாக பாஜவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். பாமக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற மாட்டார்கள். தேர்தலில் பாஜவுக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தி.க. மேடை மற்றும் கம்யூனிஸ்ட்கள் மேடையில் கூட நான் பேசுவேன். என்னை பயன்படுத்தினால் பேசுவேன். இதற்காக யார் கிட்டேயும் போய் நான் நிற்க மாட்டேன். பாஜவின் பொருளாதார கொள்கை, வகுப்புவாத கொள்கை, மதவாதத்தை எதிர்த்து எனது பிரசாரம் கடுமையாக இருக்கும் என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Lok Sabha ,interview ,Bhajan ,PAMAKA ,AIADMK ,Sampath ,Nanjing , Lok Sabha polls, AIADMK, PAMAKA, Bhaja fatality, nanjil sampat
× RELATED மக்களவை தேர்தலுடன் பேரவை தேர்தல்...