×

பைக்டாக்சி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கால்டாக்சி ஓட்டுநர்கள் காவல் நிலையம் முற்றுகை

சென்னை: சென்னையில் தனியார் நிறுவனம் சார்பில் பைக்டாக்சி நிறுவனத்தை தடை செய்ய வலியுறுத்தியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று 100க்கும் மேற்பட்ட கால்டாக்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர்  எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் அழைத்து சமரசம் பேசினர். அப்போது அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அவர்கள் முற்றுக்கை போராட்டத்தை கைவிட்டனர்.பின்னர் கால் டாக்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன்  நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  பைக் டாக்சி நிறுவனம் தனியார் பயன்பாட்டிற்கு என்று முதலில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அந்த நிறுவனம் பொதுமக்களையும் அதில் ஏற்றிச் செல்ல ஆரம்பித்தனர். இதனால் கால்டாக்சிக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசில் பிடித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக நேற்று முன்தினம்  சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த செயலி மூலம் புக்கிங் செய்தோம். அப்போது பயணிகள் என்று எங்களை ஏற்ற வந்த 18 இருசக்கரவாகனங்களை பறிமுதல் செய்து கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனால் எங்களுடைய தொழில் அதிகமாக பாதிக்கப்படுகிறது. எனவே அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.நடவடிக்கை எடுக்காத தால் நேற்று மாலை 5 மணியளவில்  பைக்டாக்சி நிறுவனத்தை தடை செய்ய வலியுறுத்தியும், ஷேர் புக்கிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஈக்காட்டுதாங்கலில் அமைந்துள்ள தனியார் கால்டாக்சி தலைமை அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட கால்டாக்சி ஓட்டுநர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Caldaxi drivers ,siege ,police station ,company , Pyticoxy, Caldaxi drivers, Siege
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை