×

மெட்ரோ வாட்டர் ஒப்பந்தம் எடுப்பதில் அடிதடி: 6 பேர் கைது

சென்னை: கொடுங்கையூரை சேர்ந்த பாலசுப்பிரமணி(48). இவர் நேற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை மெட்ரோ வாட்டர் வாரியத்தில் நடைபெற்ற ஒப்பந்ததில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது செர்ணபூமி நிறுவனத்தை சேர்ந்த கிருஷ்ண குமார், வென்சூர் நிறுவனத்தை சேர்ந்த சணல் குமார் ஆகியோர், ஒப்பந்ததில் கலந்து கொள்ள விடாமல் தடுத்துள்ளனர். அப்போது இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.   ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், மற்றும் சனல் குமார் ஆதரவாளர்களான கிரிதரன்(24), ராஜ்குமரன்(25), தினேஷ்(18), கார்த்திக்(20), ஜிவகுமார்(18),கவுதம்(28) உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து பாலசுப்பிரமணியனை தாக்கி கொலை மிரட்டல் விட்டதாக தெரியவருகிறது. பாலசுப்பிரமணி 8 பேர் மீது சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, தாக்குதல் நடத்திய 6 பேரை கைது செய்தனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : METROWERT , Metro Water, Arrested
× RELATED கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!