×

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு தீவிரம்; மதிமுக, வி.சி.க. முஸ்லீம் லீக் கட்சியுடன் இன்று ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டியில், . இது முதல் கட்ட பேச்சுவார்த்தை. அடுத்த அடுத்த சுற்றுகளில் முடிவு ஏற்படும். இரண்டொரு நாளில் பேச்சுவார்த்தை முடிந்து விடும். தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தான் பேசினோம்.  அதிமுக, பாஜக, பாமக சந்தர்ப்பவாத கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்.” என்றார். ஓரிரு நாளில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் இரண்டு தினங்களில் திமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் விவரங்கள் தெரியவரும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MDMK ,DMK ,Muslim League , Parliamentary Elections 2019, DMK Alliance, Vicika, Congress, MDMK, Muslim League,
× RELATED தேர்தல் விதிமுறைகளை மீறி...