×

உதவி மருத்துவர் தற்கொலை விவகாரம்: மருத்துவர்கள் போராட்டத்தால் உதவி இயக்குனர் சஸ்பெண்ட்

சென்னை: திருத்தணியில், கால்நடை உதவி மருத்துவர் தற்கொலைக்கு காரணமான உதவி இயக்குனரை நீக்க கோரி, கால்நடை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உதவி இயக்குனரை தற்காலிகமாக நீக்கியுள்ளது. திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள பாலாபுரம் கால்நடை மருந்தகத்தில், உதவி மருத்துவராக பணியாற்றியவர் ஆர்.சிவா (30). இவர், தொகுப்பு ஊதியத்தின் அடிப்படியில் பணியில் சேர்ந்தார்.  அப்போது, ஏற்பட்ட பணிச்சுமை மற்றும் திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் மகேந்திரன்  டார்ச்சரால் சிவா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரது சகோதரர் சங்கர் ஆர்.கே.பேட்டை போலீசில் அளித்த புகாரில், என் அண்ணன் சிவா, உயர்அதிகாரியான உதவி இயக்குனர் கொடுத்த பணிச்சுமையின் காரணமாக, தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவர், மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த, 75 கால்நடை மருத்துவர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, திருத்தணி உதவி இயக்குனர் மகேந்திரனை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : assistant director ,doctors , Assistant physician suicide, assistant director, suspended
× RELATED பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்