×

பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட ராஜ்யசபா சீட்டில் அன்புமணி மனைவி சவுமியாவை நிறுத்த திட்டம்

சென்னை: பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ராஜ்யசபா சீட்டில், அன்புமணியின் மனைவி சவுமியாவை நிறுத்த ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. .  தமிழகத்தில் வரும் ஜூன் 24ம்தேதியுடன் 6 பேரின் பதவி காலம் முடிவடைகிறது. இதில் அதிமுகவை சேர்ந்த அர்ஜூன், லட்சுமணன், மைத்ரேயன், ரத்தினவேல் ஆகிய 4 பேரும், திமுகவை சேர்ந்த கனிமொழி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சேர்ந்த டி.ராஜா ஆகியோரும் உள்ளனர். இதில் அதிமுக சார்பில் 4 ராஜ்யசபா சீட் உள்ளது. இதில் ஒன்றுதான் பாமகவுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளது.

 எனவே, நாடாளுமன்ற தேர்தலில் ஒருவேளை வேட்பாளராக நிற்கக்கூடிய அன்புமணி தோல்வியை தழுவினாலும் அவரை ராஜ்யசபா சீட் மூலம் எம்பி ஆக்கவும் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
ஒருவேளை அவர் வெற்றி பெற்று விட்டால்,  அன்புமணியின் மனைவி சவுமியாவை ராஜ்யசபா சீட் மூலம் எம்பி ஆக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சவுமியா, பசுமை தாயகம் என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். . அவரது தந்தை மற்றும் சகோதரர் காங்கிரசில் தீவிர அரசியலில் இருப்பவர்கள். எனவே இந்த பதவிக்கு பொரு்த்தமாக இருப்பார் என்று பாமக தரப்பு முடிவு செய்துள்ளதாக பாமக தரப்பில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு தான், ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்ற பழமொழி கச்சிதமாக பொருந்தும் என்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சாக உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajya Sabha ,Saumia ,Dhamma , PMK, a Rajya Sabha seat, anbumani wife cavumiya
× RELATED மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 பேர் பதவி ஏற்பு