×

கிருஷ்ணகிரி டிஎஸ்பி வீட்டில் சிக்கிய 4.34 லட்சம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டி.எஸ்.பியாக இருந்த கண்ணன், தேர்தல் பணிக்காக, கோவை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை ஆணையராக கடந்த 4 நாட்களுக்கு முன்னர் பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில். டி.எஸ்.பி கண்ணன் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்கள் குவிந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் அதிகாலை 1 மணி வரை அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் காட்டப்படாத 4 லட்சத்து 34 ஆயிரத்து 500  பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன்படி டி.எஸ்.பி கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Krishnagiri DSP , Krishnagiri DSP, lakh
× RELATED கிருஷ்ணகிரி டிஎஸ்பி வீட்டில் லஞ்ச...