×

டி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்

சென்னை: டி.ராஜேந்தர் மகன் குறளரசன், இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.நடிகர் மற்றும் இயக்குனர் டி.ராஜேந்தர் மகன்கள் சிம்பு, குறளரசன், மகள் இலக்கியா. இவர்களில் சிம்பு நடிகராக உள்ளார். குறளரசன் இசை அமைப்பாளராக இருக்கிறார். இலக்கியா திருமணமாகி கணவருடன் வசிக்கிறார். இந்நிலையில், குறளரசன் தன் தாய் உஷா, தந்தை டி.ராஜேந்தர் முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதற்கான நிகழ்ச்சி, சென்னை அண்ணாசாலையில் உள்ள மெக்கா மசூதியில் நேற்று முன்தினம் நடந்தது. குறளரசன் இஸ்லாம் பெண் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை மணக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கோலிவுட்டில் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் மதம் மாறினார் என்று தெரிகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : T. Rajendar , T. Rajendar's son ,converted to Islam
× RELATED தமிழ்நாடு முதல்வர் தாயுமானவர்...