×

அரசு உயர் அதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி கட்டாயம்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது பெண் எஸ்.பி. கூறிய பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பெண் எஸ்பி கொடுத்த பாலியல் தொல்லை புகாரில் ஐஜி மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது,  தமிழகத்தில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை உயர் அதிகாரிகளின் அறைகளில் கட்டாயம் சிசிடிவி பொறுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் முதலில் தனது அறையில் சிசிடிவி கேமரா பொருந்துமாறு பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.  பனி செய்யும் இடங்களில் பெண்களுக்கு நிகழும் பாலியல் தொல்லையை தடுக்கும் வகையில் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இரண்டு வாரங்களில் அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐஜி முருகனுக்கு எதிராக அவரது துறையில் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர்  பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டியை அமைத்து டிஜிபி  உத்தரவிட்டார். புகாரை விசாரித்த விசாகா கமிட்டி ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது.  இதை எதிர்த்து ஐஜி  முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது துறையில் விசாகா கமிட்டி உள்ளதால்  சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்  என்று மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல், ஐஜி முருகனை பணிமாற்றம் செய்யக்கோரி புகார் கூறிய பெண் அதிகாரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை  விசாரித்த உயர் நீதிமன்றம், ஐஜி முருகனுக்கு எதிராக கொடுக்கப்பட்ட பாலியல் புகார் மீது 6 மாதங்களாக நடவடிக்கை எடுக்காததற்கு  கண்டனம்  தெரிவித்திருந்தது. இந்த வழக்குகள் நேற்று மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில்  அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ஐஜி முருகனுக்கு எதிராக போலீசாரிடம் புகார் அளிக்காமல் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரிடம் பாதிக்கப்பட்ட  பெண் புகார் அளித்ததாலேயே, நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

இதனை கேட்ட நீதிபதி, இதுபோன்று பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல்  கொடுமைகள் தொடர்பான புகார்கள் பெறும்போது, நடைமுறை குறைகளை  கருத்தில் கொள்ளாமல் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுப்பதை அரசு உறுதி செய்ய  வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், ஐஜி முருகனுக்கு எதிராக  பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் மீது லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் உடனடி நடவடிக்கை எடுக்காததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது பெண் எஸ்.பி. கூறிய பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கலாம் என ஐகோர்ட் உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CCTV ,government offices ,jury , The High Court, State High Commissioner, CCTV,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...