×

பிஓஎஸ் கருவி மூலம் கட்டணம் செலுத்துவதில் தவறு நேர்ந்தால் திரும்ப பெறுவது எப்படி?: ஐஜி குமரகுருபரன் சார்பதிவாளர்களுக்கு அறிவுரை

சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம், ஆயிரத்திற்கும் மேல் ரொக்கமாக  வசூலிக்க கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றாமல் லட்சக்கணக்கில் ரொக்கமாக பணம்  பெறப்படுவதாக கூறப்படுகிறது.
இதில், கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் புழங்குவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து டெபிட், கிரெடிட் கார்டுகள் வாயிலாக கட்டணம் வசூலிக்கும்  வகையில் எஸ்பிஐ வங்கி மூலம் பிஓஎஸ் கருவி நிறுவப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 575 அலுவலகங்களுக்கு தலா 1 வீதம் பிஓஎஸ் கருவி  வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் மூலம் பிப்ரவரி 18ம் தேதி முதல் பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன்  உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து பதிவுத்துறை ஐஜி அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியருப்பதாவது: அனைத்து சார்பதிவாளர்கள்  அலுவலகங்களிலும் ரூ.1000 வரையிலான கட்டணங்களை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கியின் பிஓஎஸ் இயந்திரம் வழி மட்டுமே வசூலிக்க வேண்டும்.  ரொக்கமாக எந்த கட்டணத்தையும் வசூலிக்க கூடாது என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பிஓஎஸ் இயந்திரம் மூலம் தொகை வசூலிக்கப்பட்டதும் இரண்டு  ரசீதுகள் அதில் இருந்து உருவாகும். ஒரு ரசீதை சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்க வேண்டும். மற்றொரு ரசீதை அலுவலகத்தில் பராமரிக்க வேண்டும். ஸ்டார் 2.0  மென்ெபாருளில் பிஓஎஸ் இயந்திரம் மூலம் பெறப்பட்ட ரசீதில் உள்ள ஆர்ஆர்என் எண்ணுடன் உட்புகுத்தி ரசீது தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு கணக்கிலும்  பிஓஎஸ் இயந்திரம் மூலம் வசூலிக்கப்பட்ட தொகை தனியாக காட்டப்படும்.

சார்பதிவாளர் தொகையை பிஓஎஸ் இயந்திரம் மூலம் வசூலிக்கும் போது  எக்காரணத்தை கொண்டும் இரண்டாவது முறை அதே தொகையை வசூலிக்கக் கூடாது. தொகை செலுத்திய பின் தவறாக செலுத்தியிருந்தாலோ அல்லது  ஏதாவது ஒரு காரணத்திற்காக சேவையினை பெறாமல் தொகையினை திரும்ப பெற விரும்பினால் சார்பதிவாளர்கள் சில நடைமுறைகளை பின்பற்ற வேணடும்.  அவ்வாறு தவறாக செலுத்தப்பட்ட தொகையை வேறு ஆவணத்திற்கு உபயோகப்படுத்தி கொள்ளலாம். இம்முறை மூலம் பணம் செலுத்தி ஒரு வருடத்திற்குள்  சேவையினை பெறாவிடால் செலுத்திய தொகை காலாவதி ஆகிவிடும் எனவும் அதை திரும்ப பெற இயலாது. இம்முறை சரியாக செயல்படுத்தப்படுவதை  கண்காணிக்க மாவட்ட பதிவாளர்கள் மற்றும்  டிஐஜிக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : POS Tool, Fee, IG Kumarakaran, Respondents
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...