×

சாரதா சிட்பண்ட் மோசடி: கொல்கத்தா கமிஷனரிடம் 5வது நாளாக விசாரணை

ஷில்லாங்: சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் 5வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை  நடத்தினார்கள்.
மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் 17 லட்சம் அப்பாவி மக்களிடம் ரூ.30 ஆயிரம் கோடி மோசடி செய்திருப்பதாக குற்றம்  சாட்டப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புள்ள முக்கிய ஆவணங்களை தற்போது கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருக்கும் ராஜீவ் குமார் அழித்து விட்டதாக  சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் கடந்த சனிக்கிழமை முதல் விசாரணைக்கு  ஆஜராகி, சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். தொடர்ந்து 5வது நாளாக நேற்றும் அவர் விசாரணைக்கு ஆஜரானார்.

அவருடன் இரண்டு  மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர் உடன் சென்றனர். ராஜீவ் குமாரிடம் கடந்த 4 நாட்களில் மொத்தம் 40 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.   சாரதா சிட்பண்ட் நிறுவனம், ரோஸ்வேலி நிதி நிறுவனம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் முகத்தை மறைத்தபடி,  அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். ராஜீவ் குமார் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய சிறிது நேரத்தில்  அந்த மர்ம நபர் சிபிஐ அலுவலகத்துக்கு வந்தார். அவர் யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : commissioner ,Calcutta , Saradha Sidhap fraud, Calcutta Commissioner, Investigation
× RELATED நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை,...