×

ஆறுமுகசாமி ஆணைய விவகாரம் அப்போலோ மருத்துவர்கள் ஆஜராக ேவண்டும்: lதடைவிதிக்க மறுப்பு l ஆணையம் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆறுமுகச்சாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்து விட்டது. அப்போலோ மருத்துவமனை சார்பில் சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் அப்போலோ தரப்பு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.ஆனால் ஆணைய  விசாரணையில் எங்கள் மருத்துவமனைக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே, ஆறுமுகச்சாமி ஆணையம் அமைக்க அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் 21 துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிட டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது அப்போலோ மருத்துவமனை சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஆணையத்தால் கடந்த 2016 செப்டம்பர் 22ந்தேதி ஜெயலலிதாவை சிகிச்சைக்காக  அழைத்து செல்ல வேண்டிய சூழ்நிலை மற்றும் அவர் இறக்கும் வரை வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து தான் விசாரிக்க முடியும்.

அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்படவில்லை. குற்ற வழக்குகளை நீதிமன்றம் விசாரிப்பது போல ஆணையம் விசாரித்து வருகிறது. மருத்துவ சிகிச்சையில் குறைபாடுகள் இருப்பது போன்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது என்றார். அப்போது, ஆணையத்தின் சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, அப்போலோ மருத்துவமனை தரப்புக்கு விளக்கம் அளிக்க பல வாய்ப்புகள் தரப்பட்டுள்ளது. ஆணையத்தின் விசாரணை சரியான பாதையில்தான் செல்கிறது என்றார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஆறுமுகச்சாமி ஆணையம் வரும் 15ம் தேதிக்குள் பதில் தரவேண்டும் என்று உத்தரவிட்டனர். அப்போது, மருத்துவமனை தரப்பு மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அப்போலோ மருத்துவர்கள், நர்சுகள், ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஆணையத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரினார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் விசாரணையை வரும் 15ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

தடை கோரவில்லை: அப்போலோ விளக்கம்
அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதா  மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு  முழுமையாக தடை கோரி அப்போலோ நிர்வாகம் ஐகோர்ட்டில் மனு தாக்கல்  செய்யவில்லை. மருத்துவ சிகிச்சை தொடர்பான விசாரணைக்கு மட்டுமே தடை கோரி மனு  தாக்கல் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அப்போலோ மருத்துவர்கள் ஆணையத்தில்  ஆஜராகவும் விலக்கு கோரி இருந்தது.  மனுவை விசாரித்த ஐகோர்ட், ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 15ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

இந்தநிலையில்  ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு இமெயில்  மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், 12 மற்றும் 13 ஆகிய  தேதிகளில் (அதாவது இன்றும், நாளையும்) விசாரணைக்காக அப்போலோ மருத்துவர்கள்  ஆஜராக வேண்டும் என்று ஆணையம் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தது. தற்போதைக்கு  இந்த விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆஜராக வேண்டிய  தேதி குறித்து ஆணையம் பின்னர் தெரிவிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : affair ,doctors , Aurangasamy Commission, Apollo Doctors, High Court
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...