×

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமையாது என்பது திருமாவளவன் சொந்தக் கருத்து: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அரசியல் கட்சிகளுக்கு இது பரீட்சை நேரம் எனவே அதில் வெல்வதற்காக பா.ஜ.க. தலைவர்கள் தமிழகம் வருவதாகவும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசின் பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடையவுள்ள நிலையில், ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் 2வது வாரத்தில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதில் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சி.வி.சண்முகம், செம்மலை, மனோஜ்பாண்டியன், ரபிபெர்னார்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் அந்தக் குழுவின் கூட்டம் இன்று சென்னை ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமையாது என்று கூறுவது திருமாவளவனின் சொந்தக் கருத்து என்றார். இதற்கிடையே குழுவின் கூட்டம் நேற்று நடந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து முதல்வர் பல நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் கூறி உள்ளார். அதன்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணி குறித்து முறையான அறிவிப்பு அதிமுக தலைமை கழகம் வெளியிடும் என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Digg ,Jayakumar ,coalition ,Thirumavalavan , Digg - BJP Coalition, Thirumavalavan, own opinion, Minister Jayakumar
× RELATED பெண் கொலையில் அவதூறு அண்ணாமலை மீது வழக்கு