×

உடுமலை அருகே அட்டகாசம் செய்யும் சின்னதம்பி யானையை விரட்ட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

உடுமலை: சின்னதம்பி யானையை வனத்துக்குள் விரட்ட வலியுறுத்தி உடுமலை அருகே கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்   போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவையில் பிடிபட்டு, டாப்சிலிப் வனத்தில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை, கடந்த ஒரு வாரமாக திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உலாவி வருகிறது.  உடுமலை கிருஷ்ணாபுரத்தில் சர்க்கரை ஆலையின் பின்புற பகுதியில் சுற்றித்திரியும் இந்த யானை தோட்டங்களில் புகுந்து நெல், கரும்பு பயிர்களை சாப்பிட்டு  வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், செங்கன்புதூரில் கரும்பு தோட்டத்தில் புகுந்தது. பின்னர், அருகில் உள்ள நெற்்கதிர்களை உருவி  சாப்பிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று மதியம் தண்ணீரை தேடி அலைந்த யானை, கரும்புக்காட்டில் ஈரப்பதத்துடன் காணப்பட்ட பகுதியில் ஹாயாக  படுத்துக்கொண்டது. இதை ஏராளமானோர் பார்த்துச் சென்றனர்.  இந்தநிலையில், சின்னதம்பி யானை விவசாய நிலங்களுக்குள் திரிவதால் பயிர்கள் சேதமடைந்து  வருகின்றன.

எனவே, இந்த யானையை வனப்பகுதியில் விரட்ட வலியுறுத்தி நேற்று காலை 8 மணியளவில், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்களும்,  விவசாயிகளும் உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். தகவல் அறிந்து வந்த தளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். சின்னதம்பி விவசாய நிலங்களில் சுற்றி திரிவதால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஒரு  வாரத்துக்கு மேல் வனத்துறையினர் போக்கு காட்டி வருகின்றனர். எனவே யானையை வனத்துக்குள் விரட்ட வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்டஈடு  வழங்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.  உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு  கலைந்து சென்றனர்.இந்த மறியல் காரணமாக உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்நிலையில், யானை நடமாடும் கரும்புக்காடு பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து, மடத்துக்குளம் போலீசார்,  யானை நிற்கும் இடத்தில் குவிக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnathambi ,Udumalai , Udumalai, Cattagama, Chinnathambi elephant, rural people stir, traffic
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு