×

ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி வாகனங்களை குறைக்காமல் எரிபொருளுக்கு தடையா?

மதுரை: புதிய பெட்ரோல் பங்க்குகளுக்கு தடை கோரிய வழக்கில், வாகனங்களை குறைக்காமல் எப்படி எரிபொருளுக்கு மட்டும் தடை விதிக்க முடியுமென ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நாடு முழுவதும் 56 ஆயிரம் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை மையங்கள் உள்ளன. நாடு முழுவதும் கூடுதலாக 65 ஆயிரம் எரிபொருள் விற்பனை நிலையங்களை திறப்பதற்கான அறிவிப்பை கடந்தாண்டு நவம்பரில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  சுற்றுச்சூழல் நலன் கருதி புதிதாக பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் திறக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், ‘‘வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகமாக திறக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகை, வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் தேவைக்ேகற்ப எரிபொருள் அவசியம். இதற்காகத்தான் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் பயன்பாட்டை குறைக்காமல் எப்படி எரிபொருள் பயன்பாட்டை மட்டும் தடுக்க முடியும்? பெட்ரோல், டீசல் தேவையை எப்படி போக்குவது? இதே நிலை நீடித்தால் பிறப்பு விகிதத்திலும், வாகன பயன்பாட்டிலும் நாம் சீனாவை பின்னுக்கு தள்ளி விடுவோம். இதை முதலில் சரிசெய்ய வேண்டும். இதன்பிறகு ஒரு வீட்டில் இரு வாகனங்கள் பயன்படுத்தினால் 200 சதவீதம் வரி விதிக்க வேண்டும். தேர்தலில் வாக்கை விற்பனை செய்ததால் தான் நாட்டில் மழை பெய்யவில்லை. மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Judge ,Judiciary , Jury judges, vehicles, fuel
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...