×

அதிமுக அரசு பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் மும்மடங்கு அதிகரிப்பு: நிர்வாக திறனில்லை என நிபுணர்கள் புகார்

சென்னை: ஆட்சி பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் அதிமுக அரசு தமிழகத்தை சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடனில் தள்ளியிருக்கிறது. 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழக அரசு ஒரு லட்சம் கோடி ருபாய் கடனில் இருந்தது. ஆனால் இந்த 9 ஆண்டுகளில் தமிழக அரசின் கடன் 3,55,844 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2019-20-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. அரசின் வருவாயை உயர்த்தாமலும், முதலீடுகளை ஈர்க்காமலும் இலவசங்களை வழங்குவதால் நடப்பாண்டில் அரசின் கடன்சுமை ஏறும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியிருகின்றனர்.

2011-12-ம் ஆண்டு 1 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக அதிமுக அரசு சட்டப்பேரவையில் தெரிவித்தது. அது 2012-13-ம் ஆண்டு 1 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாயாகவும், 2013-14-ம் ஆண்டு 1 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாயாகவும் உயர்ந்தது. 2016-ல் ஆட்சி முடியும் போது 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் அரசு முழ்கியிருந்தது.

2016-ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்த போது 2016-17-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 2 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக தெரிவித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு 2017-18-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் 3 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் அரசு மூழ்கியிருப்பது தெரியவந்தது. அதிமுக அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் தமிழக அரசின் கடன் 3 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Experts ,AIADMK ,state , AIADMK,government,increase,state's debt,Experts,complain,administrative,ability
× RELATED பணம் கொடுக்கும் கட்சிகள் மீது...