×

சென்னையில் மிஸ்டர் இந்தியா போட்டி மார்ச் 29, 30, 31 தேதிகளில் நடக்கிறது பெண் பாடி பில்டர்களும் பங்கேற்பு

சென்னை: பாடி பில்டர்கள் பங்கேற்கும் 12வது தேசிய மிஸ்டர் இந்தியா போட்டி மார்ச் 29, 30, 31 தேதிகளில்  சென்னையில் நடைபெற உள்ளது. பெண் பாடி  பில்டர்களுக்கான போட்டியும் நடைபெற  உள்ளது. பெண்களுக்கான 7 வது உடற்கட்டு விளையாட்டு மற்றும் மாடலுக்கான போட்டியும் நடத்தப்படும். இது குறித்து  தமிழ்நாடு அமெச்சூர் பாடி பில்டிங் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.அரசு,  இந்திய பாடி பில்டர்ஸ் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்  சேத்தன்  பாதாரே  செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உடற்கட்டு விளையாட்டில் ஈடுபட்டுள்ள வீரர்கள், வீராங்கனைகள்  பங்கேற்கும் தேசிய அளவிலான 12வது சீனியர் பாடி பில்டிங் போட்டி  சென்னையில்  நடைபெற உள்ளது. எங்கள் அமைப்பின் சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக இந்த மிஸ்டர் இந்தியா போட்டி பிரம்மாண்டமாக நடத்துகிறோம்.

இந்த போட்டியுடன்  ஆண்களுக்கான 7வது தேசிய உடற்கட்டு விளையாட்டு மற்றும் பெண்களுக்கான உடற்கட்டு மாடல் சாம்பியன் போட்டிகளும் நடைபெற  உள்ளன.


மார்ச் 29, 30, 31 தேதிகளில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் போட்டிகள் நடைபெறும்.  இந்தப் போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து  சுமார் 500 வீரர்கள், 100வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தின் சார்பில் 2 அணிகளிலும் தலா 15 வீரர்கள், 2 வீராங்கனைகள்  கலந்துக் கொள்வார்கள்.

பாடி பில்டிங் விளையாட்டில் இந்திய அதிக பதக்கங்கள் குவிக்கிறது என்றால், அதில் தமிழகத்தின் பங்கு அதிகமாக இருக்கும். பாஸ்கரன், ஜெயபிரகாஷ், கார்த்திக்,  பாலமுருகன், ஹரிபாபு, ராஜந்திரன், செந்தில்குமாரன், பாலு போன்ற தமிழக வீரர்கள் போட்டியில் பங்கேற்றாலே இந்தியவுக்கு கட்டாயம் பதக்கம் கிடைக்கும்.


அப்படி பாடி பில்டிங் விளையாட்டில் ஆர்வமுள்ள மாநிலத்தில் தேசிய அளவிலான போட்டியை நடத்துவது பெருமைக்குரியதாகும்.  போட்டியில் வெற்றி  பெறுபவர்களுக்கு சுமார் 60 லட்ச ரூபாய் பரிசளிக்கப்படும். இந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில்  பங்கேற்று பதக்கங்களை குவித்த முன்னணி வீரர்கள் மட்டுமின்றி, அறிமுக  வீரர்கள், வீராங்கனையும்போட்டியில்  பங்கேற்கலாம். அதற்கான பதிவு இப்போது  நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் தமிழ்நாடு அமெச்சூர் பாடிபில்டிங் சங்கத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.மேலும் மிஸ்டர் இந்தியா போட்டி தொடர்பான விவரங்களுக்கு போஸ்  : 9843159555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : competition ,Maternity India ,Chennai ,singers , Chennai, Mister India Match, Female Body Builder
× RELATED தேசிய சிலம்ப போட்டி கோவில்பட்டி பள்ளி மாணவன் சாதனை