×

வைகோ வெளிநாடு செல்ல அனுமதி

சென்னை:  சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழாவில்  இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக ஆயிரம்விளக்கு போலீசார், வைகோ மீது தேச துரோக வழக்கில் கைது செய்தனர். அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. தற்ேபாது  வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றதிற்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 4ம் தேதி வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, தான் மலேசியாவுக்கு செல்ல உள்ளதாகவும், இதனால் பாஸ்போர்ட்டை திரும்ப தரவேண்டும் என்றும் வைகோ தரப்பில் ஆஜரான வக்கீல் தேவதாஸ் நீதிபதியிடம் கோரினார். இதையடுத்து நீதிபதி, வைகோ மலேசியா செல்ல பாஸ்போர்ட்டை திரும்ப தர உத்தரவிட்டார்,

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Waico , Waico,allowed, abroad
× RELATED மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்...