×

ஐகோர்ட் உத்தரவு எதிரொலி நீர்நிலைகளை பத்திரப்பதிவு செய்ய தடை: n மீறினால் சஸ்பெண்ட் நடவடிக்கை n சார்பதிவாளர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து நீர்நிலைகளில் எந்த பத்திரமும் பதிவு செய்யக் கூடாது என்றும், மீறினால் சார்பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் பதிவுத்துறை ஐஜி சார்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் 39,202 ஏரிகள் உள்ளன. இதில், 14,098 ஏரிகள் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுபாட்டில்  உள்ளது. நாளுக்கு நாள் ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு கட்டப்படும் கட்டிடங்களுக்கு சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. இதனால், தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள 10 ஆயிரம் ஏரிகள் ஆக்கிரமிப்பாளரின் பிடியில் சிக்கி சுருங்கி விட்டது. இது தொடர்பாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீர்நிலைகளில் எந்த பத்திரமும் பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத்துறை தலைவர் சார்பில் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்ைக ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சார்பதிவாளர்கள் தமது எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமங்களை பொறுத்து வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி துறையினரிடமிருந்து நீர்நிலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் குறித்து உரிய விவரத்தினை உடனே பெற்று அலுவலகத்தில் பராமரிக்க வேண்டும். வருவாய்துறையினரின் ‘அ’ பதிவேடு மற்றும் நீர்நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் குறித்து தனியே பெறப்பட்ட அறிக்கை இரண்டையும் ஒப்பிட்டு உறுதி செய்த பின் சம்பந்தப்பட்ட சர்வே எண்களுக்கு வழிகாட்டி மதிப்பு பூஜ்யம் ஆக உள்ளதா என உறுதி செய்திட வேண்டும்.நீர்நிலைகள் என வகைப்படுத்தப்பட்ட நிலம் குறித்து சார்பதிவாளர் அலுவலக வழிகாட்டி பதிவேட்டில் சர்வே எண்கள் மதிப்பு/ தெரு மதிப்பு இருப்பின் அது குறித்து உரிய வருவாய்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினரிடமிருந்து உரிய அறிக்கை பெற்று அம்மதிப்பினை நீக்கிட உரிய சான்றுகளுடன் மாவட்ட பதிவாளர் வழி பதிவுத்துறை தலைவருக்கு உரிய கருத்துரு அனுப்பிட சார்பதிவாளர்கள் கோரப்படுகின்றனர்.

இதன்படி, நீர்நிலை வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்து எவ்விதமான ஆணவங்கள் பதிவுக்கு வரினும் அவ்வாவணங்களை சார்பதிவாளர்கள் மறுத்திட வேண்டும்.  நீர்நிலை என வகைப்படுத்தப்பட்ட நிலம் குறித்து முன்பதிவு ஆவணங்கள் உடன் ஏதும் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டால் ஆவணத்துடன் வருவாய்த்துறையின் சான்றுகள் குறிப்பாக பட்டா இன்றி பெறப்படின் ஆவணம் பதிவு செய்திட கூடாது. நீர்நிலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் தவறாக உயர்நீதிமன்ற ஆணையினை மீறி ஆவணம் ஏதும் பதிவு செய்யப்படின் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Respondents , Court Order, Water Resources, Securities, Suspend, Responsibility
× RELATED 42 விவசாய சங்கங்கள் எதிர்மனுதாரராக சேர்ப்பு