×

கொல்கத்தாவில் நடந்த நிகழ்வு வரலாற்றில் எங்கும் நிகழாதது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

புதுடெல்லி: சீட்டு மோசடி வழக்கில் சிபிஐ விசாரணையை மம்தா தடுத்து நிறுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மக்களவை கூட்டத்தில் பேசிய அவர், கடமையை செய்ய கொல்கத்தா சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறினார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்வு வரலாற்றில் எங்கும் நிகழாதது என கூறினார். மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டிற்கு சிபிஐ செல்ல நேரிட்டதாக விளக்கம் அளித்தார். இதனிடையே, இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : event ,Rajnath Singh ,anywhere ,Kolkata , Kolkata, Union Minister Rajnath Singh, CBI probe
× RELATED பேரழிவின் போது அரசியல் தேவையா?;...