×

ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதிகளில் 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

ஆலந்தூர்: ஆலந்தூர், ஆதம்பாக் கம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. ஆலந்தூர் 160வது வார்டு, ஆதம்பாக்கம் 161வது வார்டு போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் பொருட்கள் வினியோகப்படுவதாக  அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.  அதன்பேரில், ஆலந்தூர் 12வது மண்டல உதவி கமிஷனர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் மண்டல உதவி சுகாதார  அதிகாரிகள்  டாக்டர்கள் மல்லிகா, அகல்யா, சுகாதார அலுவலர்கள், ஊழியர்கள் ஆலந்தூர், மார்க்கெட், ஓட்டல் ஆதம்பாக்கத்தில் உள்ள கறிக்கடை, டாஸ்மாக்   பார், டீக்கடைகள், பேக்கரி, அரிசி கடைகள் உள்பட 222 கடைகளில் திடீர் சோதனை செய்தனர். அப்போது கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு இருந்த 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடைகளில்  பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் செய்ததால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alandur ,areas ,Adambakkam , 300 kg, plastic,seizures, Alandur , Adambakkam areas
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...