×

ஜான்சன் பேபி பவுடருக்கு இலங்கை அதிரடி தடை

கொழும்பு: ஜான்சன் பேபி பவுடருக்கு இலங்கை தடை விதித்துள்ளது. இந்த பவுடரை பயன்படுத்தினால் புற்றுநோய் வராது என்று நிரூபிக்கும் வகையில் இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இவா எச்வேரியா என்ற பெண் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்கு ஜான்சன் பேபி பவுடர்தான் காரணம் என கண்டுபிடித்த அவர் லாஸ் ஏஞ்சலஸ்   நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு 417 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு  வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.  இந்த சூழ்நிலையில் மற்றொரு பெண் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இவர் சிறு வயது முதலே ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்தியுள்ளார். ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த  இவர், ஆய்வக நிரூபணம் இல்லாததால் வழக்கில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் ஜான்சன் பவுடரால்தான் புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஆஸ்பெஸ்டாஸ் துகள் கலப்பதே இதற்கு காரணம் என   இதுதொடர்பான பல்வேறு உண்மைகளை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக ஜான்சன் நிறுவனத்துக்கு எதிராக பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 இந்த நிலையில், ஜான்சன் பேபி பவுடர் இறக்குமதி செய்ய இலங்கை தடைவிதித்துள்ளது. புற்றுநோயை ஏற்படுத்தும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இந்த பவுடரில் கலக்கப்படவில்லை என்று அந்த நிறுவனம் நிரூபிக்கும் வரை இந்த  தடை தொடரும் என இலங்கை அரசு அதிகாரிகள் மற்றும் ஸ்டாக்கிஸ்டுகள் தெரிவித்துள்ளனர்.  ஆனால், தற்போது ஸ்டாக்குகள் இருக்கும் வரை விற்பனை செய்து கொள்ளலாம். புதிதாக இனி இறக்குமதி செய்யக்கூடாது என  உத்தரவிட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Johnson ,Sri Lankan , Johnson,banned, Sri Lankan,burger
× RELATED இலங்கைத் தமிழர் முகாமில்...