×

எஸ்சி, எஸ்டி சட்ட திருத்தம் தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உரிய விசாரணை இன்றி குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்யக்கூடாது என தீர்ப்பளித்தது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, எஸ்சி, எஸ்டி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் முன்ஜாமீன் பெற முடியாது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் செய்து நிறைவேற்றியது. அதே சமயம், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்தது.  எஸ்சி, எஸ்டி சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், எந்த இடைக்கால தடையும் விதிக்க முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், மனுதாரர் ஒருவர் எஸ்சி, எஸ்டி சட்ட திருத்த மசோதாவுக்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்கக் கோரி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதி யு.யு.லலிதா தலைமையிலான அமர்வு, ‘‘இந்த விவகாரத்தில் எந்த இடைக்கால தடையும் விதிக்க முடியாது.  இது விரிவாக விசாரிக்கப்பட வேண்டியிருக்கிறது. எனவே, மத்திய அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனு மற்றும் பிற வழக்குகள் அனைத்தும் ஒன்றாக உரிய அமர்வு முன்பாக அடுத்த மாதம் 19ம் தேதி விசாரிக்கப்படும்’’ என உத்தரவிட்டார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SC ,SD ,Supreme Court , SC, ST, Supreme Court,
× RELATED தனியார், அரசு உதவி பெறும் கல்வி...