×
Saravana Stores

என்னை கைது செய்ய ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றார்: உதவி கமிஷனர் முத்தழகு மீது முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின் புகார்

சென்னை: லஞ்ச  வழக்கில் சிக்கிய உதவி கமிஷனர் முத்தழகு மீது திருவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின் போலீஸ்  கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ேநற்று தூத்துக்குடி அசோக் நகரை சேர்ந்த  திருவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை தி.நகரை சேர்ந்த தனியார்  நிறுவன இயக்குநர் சண்முகம் தொழில் நிமித்தமாக ரூ.35 லட்சம் கடன் பெற்று இருந்தார். கடந்த 13.4.2018ம் தேதி நான் எனது நண்பர்கள் சிலருடன்  சண்முகம் அலுவலகத்திற்கு சென்றேன். அப்போது என்னை பணம் கேட்டு தகராறு செய்ததாக என் மீது பாண்டி பஜார் காவல் நிலையத்தில் சண்முகம்  புகார் அளித்தார். அதன்படி பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு நான் சென்றேன்.

அப்போது உதவி ஆய்வாளர் புஷ்பா என்னை தேனாம்பேட்டை உதவி கமிஷனர் முத்தழகு விசாரிப்பார் என்று தெரிவித்தார். மாலை வரை ்அவர்  வரவே இல்லை. ஆனால் உதவி கமிஷனர் முத்தழகு உண்மைக்கு மாறாக இன்று என்னை கைது செய்து புழல் சிறையில் அடைத்ததாக ஒரு  அறிக்கையை கொடுத்தார். நான் சிறை செல்லாமலேயே மறு நாள் பத்திரிகைகளில் நான் சிறையில் இருப்பதாக செய்தி வந்தது. அதை பார்த்து நான்  அதிர்ச்சியடைந்தேன். அதன் பிறகு நான் உண்மையை விளக்கி சமூக வலைத்தளங்கள் வாயிலாக வீடியோ எடுத்து பதிவு ெசய்தேன்.

எனவே, சம்பவம் நடைபெற்ற 13.4.2018ம் ேததி உதவி கமிஷனர் முத்தழகு அவரது பண பரிவர்த்தனைகளையும், என் மீது புகார் கொடுத்த மிதுன்  தாமஸ் மற்றும் சண்முகம் ஆகியோரின் செல்போன் மற்றும் பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்த  வேண்டும். உள்நோக்கத்தோடு, லஞ்சம் பெறுவதற்காக எந்த விசாரணையும் செய்யாமல் என்னை அவமானப்படுத்தும் நோக்கில் செய்லபட்ட உதவி  கமிஷனர் முத்தழகு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : David Selvi ,aid commissioner , Arrested, bribery, assistant commissioner holed, former MLA David Selvine,
× RELATED பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது