×

தேர்தல் குழுவில் நியமிக்காததால் அதிமுக எம்பி மைத்ரேயன் விரக்தி

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் குறித்து பிற கட்சிகளுடன் கூட்டணி மற்றும் ெதாகுதி பங்கீடு குறித்து பேசும் அதிகாரபூர் அதிமுக குழுவில் தன்னை சேர்க்காதது குறித்து மைத்ரேயன் எம்பி டிவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அதிமுக எம்பி மைத்ரேயன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் 2019 விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என்று மூன்று குழுக்களை கடந்த 23ம் அன்று கட்சி அறிவித்துள்ளது. மூன்று குழுக்களிலும் நான் இடம் பெறவில்லை. ஒருவரை குழுவில் சேர்ப்பதும், சேர்க்காதிருப்பதும் கட்சித் தலைமையின் விருப்பம், உரிமை. நான் 1999-ல் அதிமுகவில் இணைந்த பிறகு நடைபெற்ற 2001, 2006, 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் 2004, 2009, 2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்கள் அனைத்திலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிலும் 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிலும் ஜெயலலிதா என்னை சேர்த்தார் ’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அதிமுகவில் சசிகலாவின் செயல்பாடு பிடிக்காமல் ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தார். இரு அணிகள் இணைந்த பிறகு மைத்ரேயனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. இதனால் அவர் பாஜவுடன் நெருக்கம் காட்டி வந்தார். அடிக்கடி பிரதமர் மோடியையும் சந்தித்து வந்தார். இப்போது இந்தக் குழுவில் அவரை சேர்க்கவில்லை. இதனால் மனமுடைந்த மைத்ரேயன், தனது வருத்தத்தை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதனால் அவர் விரைவில் பாஜவில் சேருவார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMM Maitreyan ,election committee , electoral committees, AIADMk, Maitreyan,
× RELATED அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? இன்று முடிவு