×

கம்மவான்பேட்டை கிராமத்தில் காளைவிடும் திருவிழா : திரளான இளைஞர்கள் பங்கேற்பு

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த கம்மவான்பேட்டை கிராமத்தில் காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு கிராமதேவதை திரவுபதியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு காளைவிடும் திருவிழா தொடங்கியது.  விழாவில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட காளைகளும், திரளான ரசிகர்களும் பங்கேற்றனர்.

குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்து சென்ற காளைகளுக்கு முதல் 3 பரிசுகளாக பைக்குகள், 4வது பரிசாக மொபட், 5வது பரிசாக 1 சவரன் தங்க நாணயம் உள்ளிட்ட 42 பரிசுகளும், இளைஞர்களை கவர்ந்த காளைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இரவு மேளதாள வாத்தியங்கள் மற்றும் வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலாவும், பின்னர் இன்னிசை கச்சேரியும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festivals ,village ,Kammanabethu , Kammavanpettai, bull, young
× RELATED மெக்காவில் வீசும் வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 550 பேர் உயிரிழந்த சோகம்!