×

பழுது பார்க்க பட்டறைக்கு வந்த போலீஸ் ஜீப்பை வைத்து போஸ் கொடுத்து வீடியோ: இளைஞர்களை கம்பி எண்ண வைத்த ‘டிக்-டாக்’

ஆத்தூர்: சேலத்தில் பழுது பார்க்க பட்டறைக்கு வந்த போலீஸ் ஜீப் முன்பு கம்பீரமாக போஸ் கொடுத்து கலக்கலாக டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர்,  யூடியூப் என்று கட்டுண்டு கிடப்பவர்களின் லேட்டஸ்ட் பொழுது போக்கு டிக்-டாக் செயலி. இதில் பொழுது போக்குக்காக அவர்கள் செய்யும் விைளயாட்டுகள், சில நேரங்களில் பொறுப்பை மறந்து அசம்பாவிதங்களுக்கு  வித்திடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனை மெய்ப்பிக்கும் சம்பவம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்துள்ளது.  

ஆத்தூர் நகர காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டருக்கு பொலிரோ ஜீப்   வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரேடியேட்டர் மாற்றுவதற்காக இந்த ஜீப், நரசிங்கபுரத்தில் உள்ள மெக்கானிக் பட்டறையில்  விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஜீப்பில் இருந்து ஆஜானுபாகுவான இளைஞர் ஒருவர், கம்பீரமாக இறங்கி வருவது போன்றும், அதன் பின்னணியில் ‘பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெக்கணும்டா’ என்ற வசனம்  ஒலிப்பது போன்றும் டிக்டாக் செயலி மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் அந்த வாலிபரை புகழ்வது ேபால், சினிமா பாடல் ஒன்றும் பதிவு  செய்யப்பட்டுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆத்தூர் போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ரேடியேட்டர் மாற்றுவதற்காக ஜீப்பை பட்டறையில் விட்டேபாது, அங்கு பணியாற்றும் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மெக்கானிக்  சந்தோஷ்குமார் (19) என்பவர், ஜீப்பில் இருந்து இறங்கி வருவது போல் வீடியோ எடுத்துள்ளார். இதை அவரது நண்பரான நரசிங்கபுரத்தை சேர்ந்த சபரிபிரியன் (28) என்பவர், டிக்டாக் செயலியில் இணைத்து, சமூக வலைதளங்களில்  பரப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தலைமை காவலர் சிவலிங்கம் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், இருவர் மீதும் அரசுக்கு எதிரான  குற்றத்தை தூண்டுதல், தொழில் நுட்ப குற்றத்தடுப்பு (505(1) (b)r/w67IT) ஆகிய  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விளையாட்டுக்காக போலீஸ் ஜீப் முன்பு, கம்பீரமாக போஸ் கொடுத்து கலக்கியது, கம்பி  எண்ணுவதற்கு வழி வகுத்துவிட்டதே என்று அவர்களது உறவினர்கள், கலக்கத்தில் உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tick-talk , Repair, workshop, police jeep, video, youth, 'tik-tok'
× RELATED டிக் டாக் செயலியில் கலவரத்தை தூண்டும்...