×

மேட்டூர் அணையில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் நந்திசிலை வெளியே தெரிய தொடங்கியது

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்தேக்கத்தில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்திசிலை நீருக்கு வெளியே தெரிய தொடங்கியது. மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, தண்ணீர் தேங்கும்பகுதியாக 60சதுர மயில் பரப்பளவு கணக்கிடப்பட்டது. இந்த பரபரப்பளவில் அமைந்திருந்த நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது, தங்களது வழிபாட்டு தலங்களில் இருந்த சுவாமி சிலைகளை எடுத்துக் கொண்டு, அந்த தலங்களை அப்படியே விட்டு சென்றனர்.

அவ்வாறு கிராம மக்கள் விட்டுச் சென்ற தலங்களில், பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள பெரிய நந்திசிலையுடன் கூடிய ஜலகண்டேஸ்வரர் ஆலயம், 100அடி உயரம் கொண்ட கிறிஸ்துவ தேவாலயம், கோட்டையூர் பகுதியில் உள்ள பழங்கால கோட்டை, கீரைக்காரனூர் பகுதியில் உள்ள சோழப்பாடி வீரப்பத்திரன் கோயில் மற்றும் மீனாட்சியம்மன் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80அடிக்கு கீழே குறையும் போது, ஒவ்வொரு ஆலயங்களாக வெளியே தெரிய தொடங்கும். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் நீர்மட்டம், 80அடிக்கு கீழே சரிந்த போது, கிறிஸ்துவ ஆலயத்தின் கோபுரம் தெரிய தொடங்கியது. தற்போது அணையின் நீர்மட்டம் 71அடியாக சரிந்துள்ளது.

அதனால், ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்தி சிலை சுமார் அரையடி உயரத்திற்கு வெளியே தெரிய தொடங்கியது. இந்த சிலையை பார்வையிட, மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கியுள்ளனர். மேலும், மேட்டூர் அணை வறண்டு வருவதால், பாலாறு, கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில் காவிரியின் கரையோரம் தரை வறண்டு பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது. காவிரி கரையில், புதர்மண்டி கிடந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்து வருவதால், கரையோர கிராமத்தில் வசிப்போர், சகதியில் சிக்கும் மீன்களை பிடித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jalakandeswarar Nandisil ,dam ,Mettur , Mettur Dam, Jalakandeswarar, Nandisilai
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!