×

பெரியாறு அணையில் துணைக்குழு இன்று ஆய்வு

கூடலூர்: பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த மூவர் குழுவுக்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு  அமைக்கப்பட்டது. கடந்த நவ. 20ம் தேதி பெரியாறு அணையில் இக்குழுவினர் ஆய்வு செய்தனர். அதன்பிறகு டிச. 28ல் ஆய்வு செய்வதாக இருந்தது. குழுவின்  தலைவர் ராஜேஷ் வராததால் ஆய்வு ஒத்தி வைக்கப்பட்டது.பெரியாறு அணையின் நீர்மட்டம் 118 அடியாக குறைந்துள்ள நிலையில், துணை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர். இதைத்தொடர்ந்து குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழு ஆலோசனைக் கூட்டம் மாலையில் நடக்கிறது. இதில்  தமிழக பிரதிநிதிகள் பொதுப்பணித்துறை  செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி கோட்ட பொறியாளர் சாம் இர்வின் மற்றும் கேரள  பிரதிநிதிகள்  கலந்துகொள்கின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், ‘‘பேபி அணையை பலப்படுத்த கடந்த 2016ல் தமிழக அரசு ரூ.7.85 கோடி ஒதுக்கியது. ஆனால் பணிகள் நடைபெறவில்லை.  வல்லக்கடவில் இருந்து அணைப்பகுதிக்கு தரைவழி மின்சாரம் கொண்டுவர கேரள மின்வாரியத்திற்கு ₹96 லட்சம்  தமிழக அரசு கட்டி உள்ளது. அதுவும்  கிடப்பில் உள்ளது. தமிழக பொதுப்பணித்துறைக்காக ₹1 கோடி செலவில் வாங்கப்பட்ட தமிழ் அன்னை படகை இயக்குவதற்கு நான்கு ஆண்டுகளாக அனுமதி பெற  முடியவில்லை. இந்த பிரச்னைகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் பேச வேண்டும்’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Subcommittee ,Periyar Dam , Subcommittee, Periyar Dam , today
× RELATED முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு...