×

அனைத்து நீதிமன்றங்களிலும் காணொளி காட்சி வசதி: தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் காணொளி காட்சி வசதியையும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மின்னணு அறிவிப்பு பலகையையும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார். அனைத்து நீதிமன்றங்களிலும் காணொளி காட்சி வசதியை நடைமுறை படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யுமாறு அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களுக்கு  உச்சநீதிமன்றத் அறிவுறுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி காட்சிக்கான வரைவு விதி 2018ல் தயார் செய்யப்பட்டது. இந்த விதிகள் கடந்த ஜனவரி 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்தன.

இந்த நிலையில், தமிழகம் முழுதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் காணொளி காட்சி வசதியையும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மின்னணு அறிவிப்பு பலகையையும் வசதியையும் தலைமை நீதிபதி வி.கே.தாஹில ரமணி நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் காணொளி காட்சி வசதியை ஏற்படுத்த தமிழக அரசு ₹23.83 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : courts ,Chief Justice , Video courtesy,all , courts,Chief Justice
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...