×

குட்கா ஊழல் விவகாரம்: வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தலைமை செயலருக்கு பரிந்துரைத்த, வருமான வரித்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  மதுரை, மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், குட்கா முறைகேடு தொடர்பாக ஜெயலலிதா வீட்டில் நடந்த சோதனையில்,  டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வருமான வரித்துறை முதன்ைம ஆணையரின் கடிதம் உள்ளிட்ட சில ஆவணங்கள் சசிகலா அறையில் கிடைத்தன.

நுண்ணறிவுப்பிரிவு டிஜிபியாக இருந்த ராஜேந்திரனுக்கு, டிஜிபி பதவி வழங்குவதற்காகவே ரகசிய கடிதத்தை மறைத்துள்ளனர். இதில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தவறான தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் டிஜிபியிடம் அளிக்கப்பட்ட கடிதம் தொடர்பான ஆவணங்கள் உள்ளன. தலைமை செயலரிடம் அளித்த கடிதம் தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் (விசாரணை) தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 28க்கு தள்ளி வைத்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,income tax department , Gudkah scam, income tax department, jail branch
× RELATED முல்லை பெரியாறில் புதிய அணை...