×

கர்நாடகாவில் பெரும் புகழ்பெற்ற 111 வயது சித்தகங்கா மடாதிபதி காலமானார்

துமகூரு: சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமார சுவாமிகள் (111) முதுமை காரணமாக காலமானார்.  கர்நாடக மாநிலம், துமகூரு மாநகரில் பழமையான சித்தகங்கா மடம் இயங்கி வருகிறது. அதன் மடாதிபதியாக சிவகுமார சுவாமிகள் 78 ஆண்டுகளாக ஆன்மிக சேவையில் ஈடுபட்டு வந்தார். கடந்த இரண்டாண்டுகளாக முதுமை காரணமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அடிக்கடி மூச்சு திணறல், குரல்வளையில் நீர் கோர்ப்பு, ஒவ்வாமை, இதயம் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்பட பல பாதிப்புகள் இருந்தது. இதற்காக சித்தகங்கா மருத்துவமனை, பெங்களூருவில் உள்ள பிஜிஎஸ் குளோபல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த மாதம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சென்டரில் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில்  நேற்று அதிகாலையில் இருந்து மடாதிபதியின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருவதாக டாக்டர்கள் தெரிவித்த நிலையில் காலை 11.44 மணிக்கு அவர் காலமானார். மடாதிபதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் கர்நாடக அரசு மூன்று நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கிறது.  மடாதிபதியின் மறைவிற்கு குடியரசு தலைவர், பிரதமர், முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Siddhaganga ,Karnataka , Karnataka, 111 year old Siddhaganga Madathipathi, passed away
× RELATED காவிரியில் 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு பரிந்துரை