×

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குத்தி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குத்தி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். திருமணத்துக்காக ஐதராபாத் சென்று புத்தாடை வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் வழியில் கார் விபத்துக்குள்ளானது.

அனந்தபூர் மாவட்டம் குட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை 44ல் இன்று காலை இந்த விபத்து நடந்தது. அனந்தபூரில் உள்ள ராணிநகரை சேர்ந்த 7 பேர் ஹைதராபாத்தில் இருந்து அனந்தபூர் மாவட்டத்திற்கு காரில் புறப்பட்டனர். குத்தியில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள ராயல் தாபா என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது. அதே நேரத்தில் அனந்தபூரில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற லாரி கார் மீது மோதியது.

இந்த விபத்தில், மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் குட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இறந்தவர்கள் அல்லி சாஹேப் (58), ஷேக் சுரோஜ்பாஷா (28), முகமது அயன் (6), அமன் (4), ரெஹானா பேகம் (40) என அடையாளம் காணப்பட்டனர்.

ஷேக் சுரோஜ் பாஷா திருமணம் இம்மாதம் 27ம் தேதி நடக்கிறது. திருமண ஆடைகள் வாங்க ஹைதராபாத் சென்றார். திரும்பி வரும் வழியில் இந்த சாலை விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து குத்தி சிஐடி வெங்கட்ராமிரெட்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கார் ஓட்டுநர் தூக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாகத் முதற்கட்ட தகவலில் தெரிவித்துள்ளார்.

The post ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குத்தி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : AP ,Ananthapuram district ,Punti ,Andhra ,Anantapura district ,Hyderabad ,Anantapur District Kutty ,Punti, ,
× RELATED ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே கார் மீது லாரி மோதி 5 பேர் உயிரிழப்பு!!