மகர விளக்கு பூஜைகள் நிறைவு சபரிமலை கோயில் நடை அடைப்பு: பிப்.12ல் மீண்டும் திறக்கப்படும்

திருவனந்தபுரம்: மகர விளக்கு பூஜைகளுக்கு பிறகு நேற்று காலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது. மாசிமாத பூஜைகளுக்காக மீண்டும் அடுத்த மாதம் 12ம் தேதி நடை  திறக்கப்படும்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை கடந்த 14ம் தேதி நடந்தது. அன்று மாலை 6.35 மணிக்கு பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தெரிந்தது. சபரிமலையில்  குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகர ஜோதியை பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர். நேற்றுடன் (20ம் தேதி) மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.மாலை 5 மணிக்கு பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 6 மணியளவில் பந்தள மன்னர் பிரதிநிதி ராகவ வர்ம ராஜா தரிசனம் செய்தார். தொடர்ந்து 6.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.பின்னர் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோயில் சாவியை பந்தள மன்னர் பிரதிநிதியிடம் ஒப்படைத்தார். பின்னர் அடுத்து ஒரு வருடத்திற்கு சபரிமலை கோயில் பூஜைகளை நடத்த வேண்டும் என்று கூறி பந்தள மன்னர் பிரதிநிதி மேல்சாந்தியிடம் சாவியை ஒப்படைத்தார். மேலும் ஒருவருட  பூஜைக்கான பண முடிப்பையும் பந்தளம் மன்னர் பிரதிநிதி வழங்கினார்.

பின்னர், பந்தள மன்னர் பிரதிநிதி 18ம் படி வழியாக கீழே இறங்கினார். தொடர்ந்து திருவாபரண பெட்டிகளும் கோயிலில் இருந்து பந்தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. நேற்றுடன் இந்த  வருடத்துக்கான மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடைந்தது.

மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்.12ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படுகிறது.₹.95.65 கோடி வருவாய் இழப்புசபரிமலையில் இளம்பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்ததால், இந்த வருடம் பக்தர்கள் வருகை மிகவும் குறைந்தது. இதனால் கோயில் வருமானமும் கடந்த  வருடத்தை விட மிகவும் குறைந்தது. கடந்த வருடம் மண்டல காலத்தில் ₹164 கோடியே 3 லட்சத்த 89 ஆயிரத்து 374 வருமானம் கிடைத்தது. இந்த வருடம் மண்டல காலத்தில் கிடைத்த மொத்தம்  வருமானம் ₹105 கோடியே 11 லட்சத்து 93 ஆயிரத்து 917 ேகாடியாகும். இதன் காரணமாக மண்டல காலத்தில் மட்டுமே ₹58.91 கோடி வருவாய் குறைவாக கிடைத்துள்ளது. இதேபோல், கடந்த வருடம் மகர விளக்கு காலத்தில் ₹99 கோடியே 74 லட்சத்து 32 ஆயிரத்து 408 வருமானம் கிடைத்தது. இந்த வருடம் ₹63 கோடியே 69 ஆயிரத்து 947 மட்டுமே கிடைத்தது. இந்த வருட  மகர விளக்கு காலத்தில் மட்டும் ₹36.73 கோடி குறைவாக கிடைத்துள்ளது. மொத்தத்தில் இந்த வருடம் மண்டல, மகர விளக்கு காலத்தில் கடந்த வருடத்ைத விட ₹95.65 கோடி குறைவாக  கிடைத்துள்ளது. வருடம் தோறும் சபரிமலைக்கு கிடைக்கும் வருமானம் அதிகமாக கிடைப்பது வழக்கம். ஆனால், இந்த வருடம் கடந்த ஆண்டை விட ₹95.65 கோடி குறைவாக கிடைத்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>