×

கோடநாடு கொள்ளை குறித்து ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார்: ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்

சென்னை : கோடநாடு கொள்ளையில் ஈடுபட்ட சயன் விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முதல்வர் எடப்பாடி மீது கொலைப்பழி சுமத்தியதால் சயன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.  இந்நிலையில் சயன், மனோஜ் இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் எழும்பூர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களை வெளியேற்றி நீதிமன்ற கதவுகள் மூடப்பட்டுள்ளன. நீதிபதி அனுமதித்த போதும் நிபுநர்களை காவல்துறையினர் வெளியேற்றியுள்ளனர். சயன், மனோஜ் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸ் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். கொடநாடு கொள்ளையில் முதல்வர் எடப்பாடிக்கு தொடர்பு இருப்பதாக டெல்லியில் சயன் பேட்டியளித்துள்ளார்.

ஆளுநரிடம் ஸ்டாலின் புகார்
முதல்வர் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகார் அளித்துள்ளார். மேலும் கோடநாடு கொலை, கொள்ளை பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்டாலினுடன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி ஆகியோரும் ஆளுநரை சந்தித்து உள்ளனர். கோடநாடு கொலையை இயக்கியதே எடப்பாடி பழனிசாமி தான் என்று திமுன தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கையில் ஈடுப்படுவோம் என ஸ்டாலின் தெரிவித்தார். முதல்வர் பதவியில் எடப்பாடி நீடிப்பது தமிழகத்திற்கு அவமானம் என ஸ்டாலின் கூறினார். குடியரசு தலைவரிடம் புகார் கொடுப்போம் எனவும் கூறினார். மேலும் கோடநாடு கொலை தடயங்களை அழிக்க எடப்பாடி முயற்சிப்பதாக தொவித்தார். நேர்மையான ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறினார். இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை செய்வேன் என ஆளுநர் உறுதியளித்துள்ளார் என ஸ்டாலின் தெரிவித்தார். பாரபட்சமற்ற விசாரணைக்கு முதலமைச்சர் பழனிசாமி ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறினார்.

சயன் கைது ஏன்?
கடந்த 2017-ல் கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடைபெற்றது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் ஜாமினில் வெளியில் இருந்தனர். ஜாமினில் வந்த 2 பேரும் கோடநாடு கொலையில் முதல்வருக்கு தொடர்பு என்று கூறியிருந்தனர். முதல்வர் மீது கொலை புகார் கூறியதால் சயன், மனோஜ் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

சயன் சொன்னது என்ன?
தெகல்கா ஏட்டின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ, கடந்த வெள்ளியன்று பேட்டியளித்தார். பேட்டியின் போது மேத்யூ உடன் சயன், மனோஜ் இருவரும் இருந்தனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடிக்கு தொடர்பு உள்ளது என்று சயன் கூறினார். எடப்பாடி கூறியதால் கார் ஓட்டுநர் கனகராஜ் கோடநாட்டில் ஆவணங்களை எடுக்க முயன்றதாக கூறினார். ஆவணங்களை எடுத்த போது தடுத்ததால் வாட்ச்மேன் ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

5 பேர் பலியான வழக்கு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 5 பேர் இதுவரை மரணம் அமைந்துள்ளனர். ஆவணங்களை எடுப்பதை தடுத்ததால் வாட்ச்மேன் ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கொலை, கொள்ளையில் ஈடுப்பட்ட ஓட்டுநர் கனகராஜ் இரண்டு நாளில் மர்ம மரணம் அடைந்துள்ளார். 2-வது குற்றவாளியான சயனின் மனைவி மகள் சாலை விபத்தில் இறந்துள்ளார். கோடநாடு சிசிடிவி ஆப்ரேட்டர் தினேஷ்குமார் 2 மாதம் கழித்து தற்கொலை செய்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,DMK ,robbery ,Governor ,committee ,Kodanadu ,IGP , After,questioning,Kodanad,robbery
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...